நயினாதீவு 1ம் வட்டாரத்தை சேர்த்த நாராயணப்பிள்ளை கனகரத்தினம் கார்த்திகேசு ( இளைப்பாறிய ஆசிரியர் ) இன்று (05/01/2013) கொழும்பில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு 1ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
யாழ்ப்பணம், கந்தர்மடம்
Wednesday, May 01, 2013
|
(யாழ். ஓய்வுநிலை கல்விப் பணிமனை அதிகாரி கார்த்திகேசு மாஸ்டர்)
நயினாதீவு முதலாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பணம், கந்தர்மடம் ஆத்திசூடி விதியையும், தற்போது சென். ஜேமஸ் வீதி, கொழும்பு 15ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாராயணபிள்ளை கனகரத்தினம் கார்த்திகேசு யாழ். ஓய்வுநிலை கல்விப் பணிமனை அதிகாரி (05/01/2013) சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கனகரத்தினம், தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் மூத்த மகனும்
காலஞ்சென்றவர்களான இராமசுவாமி, பத்தினி தம்பதியரின் மருமகனும் ஜானகியின் (யாழ் வேம்படி மகளிர் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியை) அன்பு கணவரும்
அமிழ்தினி, காலசென்ற சிவாகரன் மற்றும் அருளினி, அருள்சிவயோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
கிருபாகரன், நாகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனும் நிமலன், நகுலன், அரங்கன், ஸ்ரீநிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, வள்ளியம்மை மற்றும் பாலகிருஷ்ணன், நளாயினி, இராசலிங்கம், துரைமனி ஆகியோரின் அன்புசகோதரரும்
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், நவசிவாயம் கணபதிப்பிள்ளை மற்றும் பிறேமாவதி, றமணி, வாமதேவி, சுந்தரலிங்கம், அருள்குமரேசன், உமாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் (09/01/2013) புதன்கிழமை 12.00 மணிமுதல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ன மலர்ச்சலையில் வைக்கப்படும், இறுதிக்கிரியைகள் (10/01/2013) வியாழக்கிழமை 8.30 மணிமுதல் 10.00 மணிவரை நடைபெற்று பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்