கிளி /கல்மடுவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் .சிறிகாந்நன் கிருத்திகன் அவர்கள் 06-01-2026 அன்று கல்மடுவில் காலமானார்.
| தோற்றம் |
கிளி, கல்மடு / நயினாதீவு - |
|
|---|---|---|
| மறைவு |
கிளி, கல்மடு Tuesday, Jan 06, 2026 |
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-01-2026 வியாழக்கிழமை மதியம் 01:00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக இராமநாதபுரம் பொது இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல், குடும்பத்தினர்.
______
சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் பாம்பு கடித்து உயிரிழப்பு..
கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.