பார்வதி பெற்ற நற் பண்பாளன்
பாரே அதிசயிக்கும் நல்லறிவாளன்
விரிவுரை செய்வதில் வல்லாளன்
வீரியச் செயல்களில் எல்லாளன்
உன்னத உணர்வு கொண்ட உணர்வாளன்
உதய வேணியின் உயிர் மணாளன்
அன்பு நிறைந்த நல் அன்பாளன் - இன்று
அகவை அறுபது காணும் மாண்பாளன்
மணிவிழா நாயகனை மனதார வாழ்த்துவோம்
அறுபதுஅடைந்தவனை அகமகிழ்ந்து வாழ்த்திடுவோம்
இருபத்தைந்தாண்டு இல்லறம் கண்டவனை
இன்மனை மக்களுடன் இன்புறவே வாழ்த்திடுவோம்
செல்லப்பா யோகலிங்கம் அவர்கள் இன்று தனது 60 ஆண்டு விழாவை தனதில்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். அவர் மேலும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்போடும் எல்லா நலனும் பெற்று வாழ நயினை நாகபூஷணி அம்பாளை வேண்டி மனதார
வாழ்த்துகிறோம்.
- Nayinai Nankai
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016