நாமகள் கடாட்சம் நன்கு வரப்பெற்ற மகள்
பாவாலே இந்தப் பாரையே மயக்குபவள்
இசை வளர்க்க சாமகானமதை நிறுவியவள்
அசையாத மனத்துணிவு கொண்டோள்
அகவை ஐபத்து அடைந்தாள் இன்று என்று
உவகை கொண்டு இந்த உலகமெல்லாவாழ்த்தட்டுமே
மணித்தீவின் இசைமரபினிலே வந்துதித்தவளாம்
தணியாத தமிழ் மோகம் தனைக் கொண்டவளாம்
அணிகள் பலசெய்து தமிழணங்கை அலங்கரித்து நிற்பவளாம்
பணியது இசையாக இசையது பணியென வாழ்பவளாம
வீணை நரம்போடு அவள் விரல்கள் விளையாடும் - அது தரும்
நாத இசைகேட்டு மயில்கள் நடமாடும்
பொன்னான உன் கலைப்பணியை இந்தப்புவனமே போற்றும
பொன்னாடை போர்த்தியே உன்னைக் கொண்டாடும்
வானமது மழை பொழிந்து வாழ்த்துக்கள் தூவும்
ஞானகுருவான உந்தன் தாயவள் தில்லைநாயகியாள் ஆசியும் சேர்ந்துன்னை வாழ்த்தும்
வரமாக நீ பெற்ற வாழ்க்கைத் துணையாம்
கரம்பொன் பெற்றெடுத்த கல்வியாளன் மனோகாந்தனோடும்
பரம்பரையின் இசை வாரிசென வந்த மகள் சுபீகாவோடும்
நிலையாக நீ சேர்த்து வைத்த புகழோடும் உடல் நலத்தோடும
கலையரசி கனகரெத்தினம் மகள் நீயும் களிப்புடன் நீடு வாழி !