திருமதி அனந்தநாயகி சண்முகானந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து

திருமதி அனந்தநாயகி சண்முகானந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து

அல்லையில் மலர்ந்து நயினை எல்லையில் பூத்த நறுமலரினை மணந்து

நல்லைக்கு இடம்பெயர்ந்து நல்லூர் முருகன் துணையோடு நல்வாழ்வு வாழ்ந்து

இன்று தலைநகர்தன்னில் தலை நிமிர்ந்து வாழுகின்ற

சொல்லையும் செயலையும் ஒன்றெனக் கொண்ட – சுந்தரி வனஜா


கல்லையும் கனிய வைக்கும் உளம் கொண்டோள் கண்டனள் இன்று அகவைநாள்

அன்னம்மா வயிற்றில் உதித்தவளாம் அருளம்பலம் அன்பில்திளைத்தவளாம்

கல்விப்பணிக்கெனவே பிறந்தவளாம் கடமையைக் கடவுளாய் மதித்தவளாம்

ஆசிரியர்க்கும் ஆசிரியராய் அரும்பணிகள் புரிந்தவளாம்

 

அகிலமே அதிசயிக்கும் ஆளுமை கொண்டவளாம்

உன்னதமான மனிதர்கள் பலரை உருவாக்கி விட்டவளாம்

காலமெல்லாம் களிப்புடனே இவள் நீடு வாழ வேண்டுமென்று

ஞாலமெல்லாம் சேர்ந்து நல்வாழ்த்துக் கூறுதிங்கே -வேரெனத் தாங்கி நிற்கும் உந்தன்

 

சண்முகன் தன் துணையோடு - விழுதுகளாம்

பெண் பிள்ளைகள் ஆர்த்தியொடு திவியின் அன்பினில் திளைத்து மருமக்கள. மனங்களில் நிறைந்து

கண்மணியான பேத்தி ஆரபியின் பாசத்திலே மூழ்கி

விண்மீன்கள் உள்ளளவும் மண்ணிலே நீடு வாழி!  மனம் போல நீடு வாழி 


Ananthanayaki
Shanmugananthan

Similar events