CANADA
ஐம்பதாவது அகவைநாள் வாழ்த்து - திரு ஶ்ரீரங்கன் சிதம்பரநாதன்

ஐம்பதாவது அகவைநாள் வாழ்த்து - திரு ஶ்ரீரங்கன் சிதம்பரநாதன்

அஞ்சா நெஞ்சமும் அறிவுத்திறனும் கொண்டு

துஞ்சாமல் சீஐடி பணிபுரிந்து நயினை மக்கள்

நெஞ்சத்துள் என்றும் நிலைத்து நிற்கின்ற

விஞ்சு புகழ் சிதம்பரநாதனொடு அன்னபூரணியாள் ஈன்றெடுத்த

பஞ்சபாண்டவர் போல் பண்புள்ள ஐவருள் மூத்த தலைமகனாய் பூத்த ஶ்ரீரங்கனவன்

ஆத்தாள் நாகம்மாள் தன் அருளாலே

பொன்விழாக் கண்டு பூரிக்கின்றான் இன்று

மணித்தீவாம் தாய்மண்ணைக் காதல் செய்வோன்

தணியாத தமிழ் சைவ மோகம் கொண்டோன்

துணிவு கொண்ட ஜான்சியைத் துணையாகக் கண்டோன்

பணிவுடைய மூன்று நன்மக்களைப் பெற்றோன்

சுற்றமும் நட்பும் சூழ்ந்திடவே வாழி!

சுகமும் வளமும் சேர்ந்திடவே வாழி

அன்பும் மகிழ்வும் தங்கிடவே வாழி!

அகவை நூறு தாண்டியும் வாழி!

அம்பிகை நாகம்மை அருளோடு வாழி

Similar events