இன்று(09/04/2013) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடும் சின்னக்குட்டி சிதம்பரநாதன் அவர்களை அம்பாளின் நல்லருளுடன் வளமாய் நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்.
பிறந்த நாள் வாழ்த்து 09/04/2013 - சின்னக்குட்டி சிதம்பரநாதன்
ஆண்டு எழுபத்தைந்து கண்டு அகமகிழ்ந்து நிற்பவனை
பாண்டுவைப்போல் பஞ்ச புத்திரர்கள் பெற்றவனை
யாண்டும் இன்பமுடன் நீடூழி வாழவென்று
வேண்டுகிறோம் நயினையூர் நாயகியை
சின்னவூர் நயினையிலே சீ. ஐ.டி யாருள்ளார் ?
சிங்களத்தின் ஆங்கிலத்தின் சிகரத்தை எவர் தொட்டார்?
சிதம்பரனார் உனைப்பெறவே - நயினை எம்
சிறுதீவு நற்றவங்கள் புரிந்ததுவோ ?
உறவுகளை உபசரிக்கும் உன்னத பண்பு -பிறருக்கு
உதவுவதில் முன்னிற்கும் உந்தன் கருணை
உத்தமன் நீயென்று உலகுக்குச் சொல்லிடவே
உலகமது உள்ளவரை உன் நாமம் வாழ்ந்திடட்டும்
பார் போற்றும் நல்லவனை பவளவிழா நாயகனை
தேரேறும் நாகம்மா திருவடியைத் தினம் தொழுபவனை
கார் குழலாள் அன்னபூரணியைக் கரம் பற்றி நிற்பவனை
சீரோடு நீடு வாழச் சிந்தை நிறைவோடு வாழ்த்துகிறோம்
நயினை நங்கை
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016