நயினையூர் நல்ல செல்வந்தன் நல்லதம்பி மகள்
நற்குணங்கள் கொண்டநல் மணியின் மனையாள்
நன்னாளாம் தான் பிறந்த நாளை இன்று ( 18/3 ) காணும் வேளை -இந்
நாளில் வாழ்த்திடுவோம் இன்பமாய் நீடு வாழி
மணி செய்த பாக்கிமாய் வாய்த்தநல் மனையாளே
பிணி தீர்க்கும் பிள்ளைகளைப் பாருக்குத் தந்தவளே
பணி செய்து நாகம்மை பாதம் தொழுபவளே
தணியாத தமிழ்ப் பற்றைத் தாகமாகக் கொண்டவளே
உ டுத்தும் சேலை விதத்தின் அழகும்
உள்ளதை உள்ள படி பேசும் உன் பேச்சும்
உயர் செல்வம் கல்விக்காய் வாழும் உன் மூச்சும்
உன்னை ஒரு படி உயர்த்திக் காட்டி நிற்கும்
தமிழ் தமிழ் என்று உன் பேச்சிருக்கும் - அந்தத்
தமிழ் மொழி போல் உன் வாழ்வு நீண்டிடட்டும்
தன்னிகரில்லாத் தாய் உந்தன் தண்ணளி
தரணியில் எமக்கு என்றும் கிடைத்திடட்டும்
- Nayinai Nankai
Similar events
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016
பிறந்தநாள்
Dec 13, 2015