சடையப்பசாமி பெரியதம்பி

தமிழரசுக் கட்சியின் தன்னிகரில்லாப் பற்றாளன்    தருமப் பணிகள் பல செய்த நல் நெஞ்சாளன் மக்களுக்கு மலைவிளக்காம் மலையடி ஐயனாரின் உரித்தாளன்    மதிநுட்பமாய் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய அறிவாளன்-முழு இலங்கை மக்கள் எல்லாம் மெய்யாய் மெய்கண்டானைப் பெறவைத்த விநியோக முகாமையாளன்    மகிழ்வுடனே இன்று தன் பிறந்த நாளைக் காணும் இனிய அன்பாளன் தனித்தமிழ்ப் பெயர் வை என்கிறார்கள் தமிழ் உணர்வாளர் இன்று    தனித்தமிழில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டினாய் நீ அன்று தன்னிகரில்லாத் தமிழன் உன் மனம் குன்று    தப்பி வந்தாய் கொடியநோய் தாக்கியும் காலனை வென்று மூத்த பிள்ளை மணிமாறன் மகனின் தமிழ்ப் பேச்சு முத்தமிழைவிடச் சுவைக்கும்    மின்னொளி அணைவினிலே முழு உறவும் உவகை கொள்ளும் வேல்விழி மகள் அழகில் வேதனைகள் பறந்துவிடும்    ஆனந்தி கற்பித்தால் அறியாமை இருள் அகலும் திருமாறன் பேச்சு தேனை விடத் தித்திக்கும்    கடைக்குட்டிஉமைமாறன் வில்லிசையில் கவலைகள் ஓடிவிடும் பாலர் பதினொருவர் மடி மீது விளையாடப்    பாக்கியங்கள் பல செய்த பாட்டன் உன்னை பல்லாண்டு பல்லாண்டு நோய் நொடிகள் இன்றி வாழ    பாம்பின்மேல் இருந்து எம் நாகம்மா பொழி ந்திடட்டும் அருள்மழையை

Similar events