ஏகாம்பரநாதன் நாகலிங்கம்

பிறந்தநாள் வாழ்த்துப்பா நற்றவங்கள் செய்து நாகலிங்கம் பெற்ற பிள்ளை நல்ல நூல்கள் எல்லாம் தேடிக் கற்ற பிள்ளை நற்றமிழை வாழவைக்கப் பெற்றாள் அன்னப்பிள்ளை நாடு போற்ற இவன் பெற்றான் நல்லதாய் நான்கு பிள்ளை காத்திரமாய்க் கடமை புரியும் கர்ம வீரன் உன்னை சாத்திரங்கள் சமயங்கள் சகலதும் அறிந்தவனை தோத்திரங்கள் பாடி நாகபூசணித்தாயைத் தொழுபவனை -இன்று மாத்திரம் வாழ்த்தாது வாழ்த்துவோம் எந்நாளும் மலம் மூன்றும் அகற்றி மதவழியில் நிற்பவனை தலம் எல்லாம் தரிசித்து தக்கபடி வாழ்பவனை குலம் விளங்க நான்கு குமாரரைத் தந்தவனை நலம் வாழ என்றும் நயினைத் தளம்வாழ்த்தும் பைந்தமிழின் இளமையோடு தீந்தமிழின் இனிமையோடு செந்தமிழின் செம்மையோடு எம் தமிழே நீ வாழு மலரோடு இன்னும் பலகாலம் மணம் வீச -நல் மனதோடு வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க - Nayinai Nankai கூத்தும் குடியுமாய் குலவிய காலமது நேத்து நடந்தது போலிருக்கிறதே இன்று - எழு பத்துமூன்று ஆண்டு கடந்தும் மலரோடு மாத்து குறையாது நல்லவனாய் நீவாழ்க பற்றும் பணிவும் அமைதியும் அன்பும் பண்பும் பெற்றும் நன்மைபல செய்தும் பலர்வியக்க - அன்று நூற்றுக் கும்மேலும் கணக்கிலேபெற்றாய் நீ போற்றும் படியாக பல்லாண்டு வாழ்ந்து பணிசெய்க. - - Gopalasundaram

Similar events