பிறந்தநாள் வாழ்த்துப்பா
நாகநாதன் தந்த நல்லமகள்
நானிலம் போற்றும் நங்கை அவள்
ரெத்தினம் போல் சிரிப்பிருக்கும்
ரெத்திநேஸ்வரி அவள் நாமம்
அன்பில் பண்பில்
உயர்ந்தவளாம் பாசத்தால் அவளை
யார்வெல்வர்
பள்ளி சென்று பணியாற்றி பலரை
வாழ்வில் உயர்த்தியவள்
ஆண்டில் எழுபதை தாண்டியவள்
ஏற்றம் பெற்று வாழ்கவென
ஆண்டாள் அம்மை தெய்வங்களை
வேண்டி மணியும்
வாழ்த்துகிறேன்
S Gopalasundaram
நயினை மண் பெற்றெடுத்த முத்து
நமக்கெல்லாம் கிடைத்த பெரும் சொத்து
நன்நாளா ம் இந்நாளில் அடைந்தாள் ஏழு பத்து
நலமுடனே அவள் வாழ நாமெல்லாம் வாழ்த்திடுவோம்
அஞ்ஞானம் போக்கி அறிவுக் கண் திறந்து
விஞ்ஞானம் போதித்தாய் விருப்புடனே
எஞ்ஞான்றும் மாணவர்கள் எவ்விடத்து சென்றாலும் -உன்
ஞானம் தன்னை ஒரு போதும் தாம் மறவார்
ஆங்கிலமும் செந்தமிழும் அ யல் நாட்டுச் சிங்களமும்
அக்கு வேறு ஆணி வேறாய் அழகுறக் கற்றவளே
திக்கு எட்டும் வாழ்த்த திருமகளே நீ வாழ - நயினைத் தாய்
திருவடியை நாமும் இறைஞ்சுகிறோம்
உள்ளதை உள்ளபடி உரைக்கின்ற உனது உள்ளம்
உன்னிட த்தில் கண்டதில்லை ஒரு சிறு துளி கள்ளம்
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்போ பெரு வெள்ளம்
உலகமது உள்ளவரை உத்தமியே நீ வாழி
Nayinai Nankai
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016