எழுபதாவது பிறந்தநாள் வாழ்த்து
அல்லையில் மலர்ந்து நயினை எல்லையில் பூத்த நறுமலரினை மணந்து
நல்லையில் வாழ்ந்து தலைநகர்தனில் வாழும்
சொல்லையும் செயலையும் ஒன்றெனக் கொண்ட – சுந்தரி வனஜா
கல்லையும் கனிய வைக்கும் உளம் கொண்டோள் கண்டாள் எழுபதின்று
அன்னம்மா வயிற்றில் உதித்தவளாம் அருளம்பலம்அன்பில்திளைத்தவளாம்
கல்விப்பணிக்கெனவே பிறந்தவளாம் கடமையைக் கடவுளாய் மதித்தவளாம்
ஆசிரியர்க்கும் ஆசிரியராய் அரும்பணிகள் புரிந்தவளாம்
அகிலம் வியக்கும் ஆற்றல் மிகுந்தவளாம்
தன்னிகரில்லாத் தலைமைப்பண்புகள் கொண்டவளை
உன்னதமான மனிதர்கள் பலரை உருவாக்கி விட்டவளை
காலமெல்லாம் களிப்புடனே நீடுவாழ - இந்த
ஞாலமெல்லாம் சேர்ந்து நல்வாழ்த்துக் கூறுதிங்கே.
நயினை நங்கை
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016