புங்கை நகரில் பூத்த இளங்காளையிவன்
நங்கையில் நல்லவளை நல்லெழில் கொண்டவளை
தெங்கின் இளம்பாளை போல் சிரிப்பவளை
மங்கையர்க்கரசி எனும் நாமம் உடையவளை
நயினை நகரில் கண்டு நல்மணம் புரிந்த
நாகலிங்கம் நன்மகன் பத்மநாதன்- இன்று
எண்பத்தைந்து அகவை எய்தினான்
என்று மண்ணும் விண்ணும் மகிழுதடி
கல்விப்பயிர் வளர்த்து மாணாக்கர் அறியாமைக்
களைபிடுங்கி ஊக்கஉரமிட்டு தேனின் சுவை போல் கல்வியினை
தெவிட்டாது தென் பாகம் வட பாகம் எல்லாம் சென்று ஊட்டிவிட்ட ஆசிரியா!
ஒப்பற்ற அதிபா! ஆண்டு பல நீ வாழி!
நாகலிங்கம் செய்த நற்பயனாய்ப் மலர்ந்தவனே நீடு வாழி!
பரிபூரணம் செய்த பாக்கியமாய்ப் பிறந்தவனே நீடு வாழி!
மக்கள் வியக்கும் மானிடனாய் வாழ்பவனே நீடு வாழி!
மக்களோடும் பேரரோடும் மண்ணில் மகிழ்வோடு நீடு வாழி! வாழி!
நயினைநங்கை