பிறந்த நாள் வாழ்த்து
நயினைநகர் நாகம்மையோடு நலமிலன் நல்லூரானை அனுதினமும் வணங்கும் பேராளன்--
மனுமுறைமை வழுவாத நல்லாளன் நடேசபிள்ளை பல்லாண்டு பழுதற்று வாழருளாய் கனிந்து.
அகவை யெண்பதை யடைந்த எமதண்ணலே உவகையுடன் உம்குடும்பம் நீவீரும் தளா்விலா பகையேதும் பற்றாது பல்லாண்டு வாழ யாமிங்கு மனதார வாழத்துகிறோம். வாழி.
அகவை எண்பதெனிலும் அகமோ இவர்க்கு ஈரெட்டாம் தகமை கொண்ட தனியழகே தரணியில் வாழ்க நீடூழி.
பேராசான் பேரென்றும் மண்ணில் பரவி வாழி ஆராவமுதே னருளால் மன்னியே வாழி பேராத வுள்ளத்தால் பெருமையுற வாழி தீராதவினை யெல்லாம் தீர்ந்து முச்சுடராய் வாழி.
Nainai. sin. so & Nagula.