பிறந்தநாள் வாழ்த்து
பட்டதாரிகளைப் பாருக்குத் தந்த பல்கலைக்கழகம் ஒன்று
பாரினிலே தான் மலர்ந்தநாளைக் காணுது இன்று
பல்லாண்டு பல்லாண்டு இவர் வாழ வேண்டும் என்று
பாசமலர் தூவி வாழ்த்துகிறோம் வாழி வாழி
மருத்துவர்கள் தந்தை என்ற மாறாத புகழோடு
பொறியியலாளரைப் பெற்ற பெருமிதத்தோடு
வணிகமாணிகளாய் உருவாக்கிய களிப்போடு
பல்லாண்டு பல்லாண்டு பாரிலே நீடு வாழி
கலைமகள் என்றும் உன்னருகிருக்க களிப்பு உன்னுடனிருக்க
நாகம்மாள் அருளிருக்க நயினை மக்கள் அன்பிருக்க
சொத்தான ஐவரோடு சேர்ந்து பத்தாகிப்போன மக்கள்மருமக்களோடு
பாலர் பதினொருவர் பாசத்தாத்தாவே பல்லாண்டு நீடு வாழி
பதவி வந்தும்பணிவுடனே வாழ்ந்த மனிதனை
பண்பிலும் பாசத்திலும் சிறந்த புனிதனை
கண்ணின் மணி போல கலந்து எம்முள் வாழ்பவனை
விண்னும் மண்ணும் வியந்தின்று வாழ்த்தட்டுமே
நயினை நங்கை
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016