கோபாலும் சரஸ்வதியும் பெற்றவளே கோமகன் ஜெயசங்கர் மனையாளே
கோடி உயிர்களைக் காப்பவளே குறையாத அன்பு கொண்டவளே
தேடியும் கிடையாத் திரவியமே எம் தேசத்தில் மலர்ந்த தாமரையே
நாடிவரும் நோயாளர் பிணி ஓடிடச் செய்பவளே நாகம்மாள் பாதம்பணிபவளே
பணமும் பதவியும் வந்து விட்டால் பாரினில்
குணமது விட்டுப் போகும் என்ற கூற்றைப் பொய்ப்பித்தவளே
கணம் தோறும் பிறர் கவலைகளைச்சுமப்பவளே
மணம் கொண்டுவீசியே உன் வாழ்வு மண்ணில் நீண்டிடட்டும்
புலம்பெயர்ந்து புது வாழ்வு புரி கனடா நாட்டினிலே
நலம் காக்கும் நற் பணியைச் செய்து மக்கள் – மனங்களிலே
வலம் வரும் நல்ல வைத்தியரை வையகத்தில்- ஆயுட்
பலம் கொண்டு பல்லாண்டு வாழ்ந்திடவே வாழ்த்திடுவோம்
நிலை தளர்ந்து தடுமாறும் மக்கள் நிம்மதிக்குச் சொந்தக்காரி
தலைக்கனம் இல்லாத் தங்க மனசுக்காரி விலை மதிக்க முடியாத பாசக்காரி
கலை உணர்வும் கடவுள் பற்றும் சேர்த்த கலவைக்காரி
மலை எனப் புகழ் பெற்று மண்ணிலே நீடு வாழ்க
வள்ளுவன் குறளமுதம் வையகத்தில் வழிகாட்டும் வரை
பாரதி பாட்டொலி பாரினிலே கேட்கும் வரை
கண்ணதாசன் பாடல் வரி காற்றலையில் ஒலிக்கும் வரை
காலத்தால் அழியாத வாழ்வு வாழ்வீர்
நயினை நங்கை
Similar events
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016
பிறந்தநாள்
Dec 13, 2015