சுவேதன்,வாசுகி தம்பதிகளின் தவப் புதல்வன் செல்வன் விருஷன் சுவேதன் இன்று 4/12/2013 தனது ஏழாவது பிறந்த நாளைக் கனடாவில் கொண்டாடுகிறார்.
ஏழாவது பிறந்தநாள் வாழ்த்து
அன்பால் அனைவரையும் கவர்ந்திடு
ஆண்டவனைத் தினமும் வணங்கிடு
இனிய சொற்களையே பேசிடு
ஈவு இரக்கம் கொண்டு வாழ்ந்திடு
உண்மையை என்றும் சொல்லிடு
ஊருக்கு நன்மை செய்ய விளைந்திடு
எண்ணும் எழுத்தும் கற்றிடு
ஏவாமல் பணி செய்யப் பழகிடு
ஐயம் வந்தால் தீர்த்திடு
ஒற்றுமையாய் வாழத் துணிந்திடு
ஓதி என்றும் இன்புறவே
ஒளவையின் ஆத்திசூடி படி
அகவை ஏழு கண்டவனே!
அருந்தமிழைப் போல பல்லாண்டு
அவனியில் நீடு வாழ
அம்பிகைஅருளை வேண்டுகிறோம்
இன்று தனது ஏழாவது பிறந்தநாளைக் காணும் விருஷன் சுவேதனை. அலைகடலின் மத்தியில் அமர்ந்திருந்து அகிலமெல்லாம் நல்லருள் பாலித்துக் கொண்டிருக்கும் நயினை நாகபூஷணி அம்மன் திருவருளால் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென்று வாழ்த்துகின்றோம்.
- கலாநிதி சபா வரதராஜா குடும்பத்தினர்.
Similar events
பிறந்தநாள்
May 14, 2026
பிறந்தநாள்
Jan 07, 2026
பிறந்தநாள்
Jun 01, 2025
பிறந்தநாள்
May 31, 2025
பிறந்தநாள்
Jan 05, 2016