நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் இன்று (06/01/2013) இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு. நிகழ்வின் தலைமையினை வைத்திய சாலை பொறுப்பதிகாரி அவர்கள் தலைமை ஏற்று நிகழ்த்தினார். இவ் நிகழ்வின்பிரதம விருந்தினராக யாழ் பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் Dr. கேதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் பிராந்திய நிர்வாக உத்தியோகத்தர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவர்களுடன் ஊர்காவற்றுறை பிரதேச வைத்திய அதிகாரி, வேலணை பிரதேச வைத்திய அதிகாரி, புங்குடுதீவு பிரதேச வைத்திய அதிகாரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.