SRI LANKA
குறிகாட்டுவான் கடற்பகுதியில் கடற்தொழிலாளர்கள் போராட்டம்

குறிகாட்டுவான் கடற்பகுதியில் கடற்தொழிலாளர்கள் போராட்டம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரியும், குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்தப் போராட்டத்தின் போது, கண்ணாடி இழை படகுகளில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு கடற்தொழிலாளர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 

இந்திய இழுவை மடி படகுகள் தொடர்ந்து மனிதாபிமானமற்ற முறையில் எல்லை தாண்டி கடல் வளங்களை கொள்ளையிடுவதோடு, தீவக மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்களை சேதப்படுத்தி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

 

இதனால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர்கள், இந்திய இழுவை படகுகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

 

தீவக கடற்தொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது



Recent news