அருள்மிகு கனடிய நயினாதீவு நாகம்மாளின் கால்நூற்றாண்டு கால அருளாட்சிப்பயணத்தில் இன்று ஒரு முக்கிய நிகழ்வொன்று அம்பாளின் பெருங்கருணையோடு கைகூடியது.

அருள்மிகு கனடிய நயினாதீவு நாகம்மாளின் கால்நூற்றாண்டு கால அருளாட்சிப்பயணத்தில் இன்று ஒரு முக்கிய நிகழ்வொன்று அம்பாளின் பெருங்கருணையோடு கைகூடியது.

அலைகடலின் மத்தியிலமர்ந்து அருளாட்சி செய்கின்ற அன்னை ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் மண்ணிலே அவதரித்து கோவிலின் நூறாண்டுகளுக்கு மேலான ஆதீன குருக்கள் மரபில் தோன்றிய சாந்தமும் ,தெய்வீகமும் நிறைந்த நயினை குருமணி சிவத்திரு.சம்பு மகேஸ்வரக்குருக்களின் குமாரர் Prof.M. Balakailasanatha kurukkal, Ph.D Professor in Sanskrit, Department of Sanskrit, Faculty of Hindu Studies University of Jaffna அவர்களின் வேதபாராயணத்தால் நாகம்மாளுக்கு சிறப்பான பூசைகள் நடைபெற்றதோடு அடியார்களுக்கு ஆசியும் வழங்கும் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

 

முதன்முதலாக நயினாதீவின் ஆதீன குருமணி கலந்து சிறப்பித்த நாளாக இன்றைய நாள் பதிவாகியது. இவர் நயினாதீவு தம்பகைப்பதியுறை பத்திரகாளியம்பாள் உடனுறை வீரபத்திர பெருமான் கோவிலின் முதன்மையான, உயர் திருவிழா குருமணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

5664 Elgin Mills RD East, Markham ON L3P 3J3.

"நாகம்மாளின் பேரருள் எல்லோருக்கும் கிடைப்பதாக"

 

 

“கனடாவில் இனிதே நடைபெற்ற பாராட்டு விழா”

நயினாதீவில் இருந்து கனடா வரசித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற வருகைதந்த நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஆதீனகுருவும், யாழ்/பல்கலைக்கழக சமஸ்கிருத துறை தலைவரும், பேராசிரியருமான

சிவஶ்ரீ. மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதக்குருக்கள் அவர்களுக்கு நயினாதீவு மக்களால் வழங்கப்பட்ட பாராட்டு விழாவின் சில பதிவுகள்.

Recent news