நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய விசேட திருவிழா நாட்களில் மேலதிக நேர படகுச் சேவைகள் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய விசேட திருவிழா நாட்களில் மேலதிக நேர படகுச் சேவைகள் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் விசேட திருவிழா நாட்களில் (27.06.2026 30.06.2026) காலை 5.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை படகுச்சேவையினை நடாத்துவதற்கு கடற்படையினருடன் கலந்துரையாடி அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் ஒழுங்கு செய்துள்ளார்.



மேலும், பக்தர்களின் நலனைக் கருத்திற்கொண்டு குறித்த படகு சேவையின் நேரத்திற்கமைய இலங்கை பேருந்து சேவை மற்றும் தனியார் போக்குவரத்து சேவையினை ஒழுங்கு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை போக்குவரத்துச் சேவையின் பொதுமுகாமையாளரையும், புங்குடுதீவு தனியார் போக்குவரத்துச் சபையின் தலைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.



ஊடகப் பிரிவு,
மாவட்டச் செயலகம்,
யாழ்ப்பாணம்.

 

_ _ _ _ _ _ _

 

நெடுந்தீவில் இருந்து நயினாதீவுக்கு நாளை விசேட இலவச படகுசேவை!!

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவுக்காக நாளையதினம் (28/06) நெடுந்தீவில் இருந்து "கரிகணன்" தனியார் படகு இலவச சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

 

நெடுந்தீவில் இருந்து காலை 7 .00 மணிக்கு நயினாதீவு நோக்கி புறப்பட ஏற்பாடாகியுள்ளதால், ஆலயம் செல்லவுள்ள பக்தர்கள் குறித்த நேரத்திற்கு மாவிலித்துறைமுகத்தில் ஒன்றுகூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recent news