எமது கிராமத்தின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியினை கருத்தில் கொண்டும் நயினாதீவின் நன்னீர் வளத்தினை பாதுகாக்கும் நோக்கிலும் நயினாதீவு பெருங் குளத்தின் விஸ்தரிப்பு பணிகளுக்காக அமரர் குமாரசாமி சாந்தலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் அமரர் யோகேஸ்வரி மகாதேவா அவர்களின் ஞாபகார்த்தமாகவும் அவர்களின் குடும்பத்தினரால் குளத்தின் எல்லைகளாக காணப்படும் தமது காணிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
இவர்களை நன்றியுடன் பாரட்டி பெருமைப்படுத்துவதில் மட்டற்ர மகிழ்ச்சி அடைகின்றோம்.
நயினாதீவின் நன்னீர் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பெருங்குளம் அகலிப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு, தங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் அவசியமானதாகும்.
எனவே, இப்பொதுநலத் திட்டத்தில் அனைவரும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கி, எமது மண்ணின் நீர்வளப் பாதுகாப்பிற்கும் எதிர்கால சந்ததியினரின் நலனிற்கும் பங்காற்றுமாறு அன்புடனும் பணிவுடனும் அழைக்கப்படுகிறீர்கள்.
ஒன்றிணைவோம் – பெருங்குளத்தைப் பாதுகாப்போம்!
நயினாதீவின் நன்னீர் வளத்தை வளப்படுத்துவோம்!
நன்றி