யாழ்ப்பாணத்தின் கடல் கடந்த தீவுகளின் அமையப்பெறும் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையமான நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருட்கள் இன்று கொண்டுவரப்பட்டன.
நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான டீசல், மண்ணெண்ணெய், பெற்றோல் இன்று காலை கடற்படையின் கப்பலூடாக 2 பவுசர்களில் கொண்டுவரப்பட்டன.
கடற்படையினரின் தரையிறங்கு கலத்தில் இந்த எரிபொருள் நிரப்பிய 2 பவுசர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து ஏற்றப்பட்டு நெடுந்தீவை வந்தடைந்தது.