SRI LANKA
தற்போது சென்னைக்கு கிழக்காக காணப்படும் வளிமண்டல சுழற்சி, மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து பாக்கு நீரிணை ஊடாக அரபிக்கடலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சென்னைக்கு கிழக்காக காணப்படும் வளிமண்டல சுழற்சி, மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து பாக்கு நீரிணை ஊடாக அரபிக்கடலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(நகர்வுப் பாதை படத்தில் காட்டப்பட்டுள்ளது)

இது அரபிக்கடல் நோக்கி நகரும் போது வடக்கு மாகாணத்தை குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் நிலப்பரப்புக்களை உள்ளடக்கியே நகரும் வாய்ப்புள்ளது.

இதனால் இன்று மாலை/இரவு( 19.10.2026), நாளை(20.10.2026), நாளை மறுதினம்(21.10.2026) மற்றும் எதிர்வரும் 22.10.2026 ஆகிய நாட்களில் வடக்கு, கிழக்கு, மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களும் கணிசமான அளவு மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

இந்த நாட்களில் மழை கிடைக்கும் போது செறிவான இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் வாய்ப்புள்ளன. எனவே இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் அதிக அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை இந்த காலப்பகுதியில் ( இன்று முதல் எதிர்வரும் 23.10.2026 வரை) இந்த சுழற்சியின் காரணமாக வட மத்திய, வடமேல், மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காற்றுச் சுழற்சியின் நகர்வு பாக்கு நீரிணையூடாகவே இடம்பெறும் வாய்ப்புள்ளதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் 20.10.2026 அன்றும் 21.10.2026 அன்றும் இக்கடற்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

அதேவேளை நாளையும்(20.10.2026) நாளை மறுதினமும்(21.10.2026) தீவுகளுக்கிடையிலான கடற்பயணங்களை மேற்கொள்வோரும் இந்தக் காற்றுச் சுழற்சியின் நகர்வைக் கருத்தில் கொள்வது சிறந்தது.

- நாகமுத்து பிரதீபராஜா -


Recent news