நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி.

நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி.

நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ் 06/12/2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தலைவரின் சிறந்த நேர்த்தியான தொலைத் தொடர்பு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் நயினாதீவில் உள்ள மூன்று பிரிவுக்குட்படுத்தப்பட்ட (J /34, J/ 35, J /36) கிராமசேவையாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 01 தொடக்கம் 08 வட்டாரங்களும் சேர்த்து 105 குடும்பங்கள் ஆகும்.

 

அதில் வீடுகள் சேதமடைந்த அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் எண்ணிக்கை 08 குடும்பங்கள் ஆகும். அக்குடும்பங்களுக்கு நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ் ஒரு குடும்பத்திற்கு தலா 51000 ரூபாய் வீதம் 08 குடும்பங்களுக்கும் 408000 ரூபாய் பெறுமதியான (சீமெந்து, கட்டி) உபகரணங்களை வீடுகள் புனரமைப்புக்காக வழங்கியிருக்கின்றோம் என்பதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

 

நன்றி

நயினாதீவு அபிவிருத்திக்கழகம்

பிரான்ஸ்.


Recent news