நயினாதீவினை சுற்றி கடல் நீர் தடுப்பணை அமைக்க கோரிக்கை

நாள் தோறும் கடல் அரிப்புக்குள்ளாகும் நயினாதீவு பிரதேசத்தினை சுற்றி கடல் நீர் தடுப்பணை அமைக்கப்பட வேண்டும் என வேலணை பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2006 ஆம் வருடம் வேலணை பிரதேச சபை யுனொப்ஸ் திட்டத்தின் ஊடாக கடல் நீர் தடுப்பணைக்கான நிதி உதவியினை கோரியிருந்தது. எனினும் யுனொப்ஸ் நிறுவனம் போதிய நிதி பற்றாக்குறை காரணமாக இத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது கடல் அரிப்பில் இருந்து நயினைதீவினை பாதுகாக்க கரையோரம் பேணல் மற்றும் முகாமைத்துவ திணைக்களத்திற்கு வேலணை பிரதேச சபையின் நயினாதீவு உப அலுவலகம் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recent news