நாகவிகரை இறங்குதுறை நவீன முறையில் புனரமைப்பு - திறந்து வைப்பார் ஜனாதிபதி

நயினாதீவு நாகவிகரைக்குச் செல்லும் இறங்குதுறை நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் இந்த இறங்குதுறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த இறங்குதுறையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி நயினாதீவுக்கும் செல்லவுள்ளார். அதன்போது இந்த இறங்கு துறையும் திறந்துவைக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Recent news