இலங்கைச் சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வில் நயினை மைந்தன் சித்தி

நயினாதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த மதியாபரணம் அம்பிகை பாகன் நகுலேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் ஸ்ரீராகவன் அவர்கள் 2013ம் ஆண்டு கற்கை நெறிக்கான இலங்கை சட்டக்கல்லூரித் தேர்வில் 75 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார். அகில இலங்கை ரீதியில் 54 வது இடம் இவருக்கு கிடைத்துள்ளது இப்பரீட்சையின் வெட்டுப்புள்ளி 69 என்பது குறிப்பிட தக்கதாகும் இவர் நயினாதீவின் முன்னாள் கிராம சபை உப தலைவர் மதியாபரணம் ( JP ) மற்றும் வர்த்தகர் முருகேசபிள்ளை என்பவர்களது பேரனும் முன்னாள் யாழ் மாவட்ட நீதிபதிகள் கதிரவேற்பிள்ளை ஏகநாதன், பரீஸ்டர் கைலாயநாதன் ஆகியோரின் பேரனும் சட்டத்தரணிகள் தம்பையா ஸ்ரீபதி தியாகர், திருநாவுக்கரசு பழனிவேலு, பரமேஸ்வரன், ஆகியோரின் இரத்த உறவினரும் என்பது இங்கு குறிப்பிட தக்கது மற்றும் இவரின் தந்தையார் சகோதரியும் கிராம அலுவலர்கள் என்பதாகும். இவர் இந்த துறையில் மேன்மேலும் வளர்ச்சி அடைய எல்லாம் வல்ல நயினை நாகபூசணி தாயை வேண்டுகின்றோம்.

Recent news