5ம் ஆண்டு புலமை பரீட்சையில் 70புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றயதினம்(19/11/12) நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற போது நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி நிதிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்
யா/நயினாதீ ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் (19/11/2012) அன்று புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 12 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இவ் வருடம் பரீட்சைக்கு தோற்றிய 17 மாணவர்களில் 12 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றதுடன் அனைத்து மாணவர்களும் 50 புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ் நிகழ்வினை ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.தனிநாயகம், இந்து சமய
ஆசிரிய ஆலோசகர் நா.இராதாகிஷ்ணன், நயினாதீவு வடக்கு கிராம அலுவலர் தி.கோகுலரூபன், கனேசா வித்தியாலய அதிபர் வீ.ஓங்காரலிங்கம், பாடசாலை அதிபர், ஆசிரியாகள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து
சிறப்பித்தனர்.