நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கான "யாழ்.விருது"

நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கான "யாழ்.விருது"நேற்றைய தினம் நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபை நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபையின் அமுதளிக்கும் அரிய பணியை கருத்தில் கொண்டு 2012 ஆம் ஆண்டுக்கான யாழ்.விருது வழங்கப்பட்டது இதன் பிரகாரம் நேற்றைய தினம் (திங்கட்கிழமை 07.08.2012) நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபை நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பாக : யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு வருடம் தோறும் வழங்கும் யாழ்.விருது இந்த வருடம் நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கு வழங்கப்பட்டது. சைவ சமய விவகாரக் குழுவின் மகா சபை ஆனி மாதம் 23ம் திகதி யாழ்.மாநகர சபையின் ஆணையாளரும் குழுவின் தலைவருமான செ.பிரணவநாதன் தலைமையில் கூடியபோது இம் முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது. இதன்படி யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு நல்லைக்கந்தன் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் வெளியிட்டுவரும் நல்லைக்குமரன் 20 ஆவது வெளியீட்டு விழா நேற்றைய தினம் திங்கட்கிழமை நாவலர் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் இந்த வருடத்துக்கான யாழ் விருது நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கு வழங்கப்பட்டது. இவ் விருதை யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபை நிர்வாகிகளிடம் கையளித்தார்.

Recent news