கவிதாயினி வித்தியாபாரதியின் *அன்புள்ள டைரிக்கு* கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு

கவிதாயினி வித்தியாபாரதியின் *அன்புள்ள டைரிக்கு* கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு

இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில் இணுவில் பொது நூலக கலை கலாசாரத்துறையின் ஆதரவில் இணுவில் கலை இலக்கிய வட்டம் நடத்தும் கவிதாயினி வித்தியாபாரதியின் "அன்புள்ள டைரிக்கு" கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு.

 

பேராசிரியர் கந்தையா ஸ்ரீ கணேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவானது மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து கடவுள் வாழ்த்து திரு .குனேந்திரன் அனுசன் (விரிவுரையாளர் இதேசிய கல்விக் கல்லூரி ) அவர்களும் வரவேற்புரையினை திரு. ஜெயகாந்தன் (பொருளாளர், இணுவில் பொது நூலகம்) அவர்களும் நிகழ்த்தினார்.

 

ஆசிரியுரையினை பேராசிரியர் சிவஶ்ரீ ம.பாலகைலாசநாதக்குருக்கள் மற்றும் சிவஸ்ரீ .சோ.பிரசன்னாகுருக்கள் அவர்களும் வாழ்துரைகளை பண்டிதை கலாபூஷணம் திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை மற்றும் திரு .சண்முகலிங்கம் முகுந்தன் அவர்களும் வெளியீட்டு உரையினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு .ஈஸ்வரநாதபிள்ளை குமரன் அவர்களும் நூல் மதிப்பீட்டு உரையினை பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் (வாழ்நாள் பேராசிரியர் பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களும் நிகழ்த்தியுள்ளனர்


Recent news