இவ் அறிவித்தலை பயணிகள் ஏற்றுக்கொண்டு பின்பற்றவும்
நன்றி ..
தகவல், நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் .
அடுத்த 24 மணி நேரத்திற்கான கடல்சார்ந்த வானிலை முன்னறிவிப்பு
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் காணப்படும் குறைந்த அழுத்தப் பகுதிகள் ஒரு தாழமுக்கமாக வலுப்பெற்று, இன்று (07ஆம் திகதி) காலை 11.30 மணிக்கு அகலம் 4.9° வடக்கு மற்றும் தீர்க்கரேகை 87.4° கிழக்கு ஆகிய இடங்களில், பொத்துவிலிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கே நோக்கி, தீவின் கிழக்குக் கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 24 மணிநேரங்களில் மேலும் வலுப்பெற்று தீவிர தாழமுக்கமாக மாறக்கூடிய அதிக வாய்ப்பு உள்ளது.
*கடல் மற்றும் மீனவ சமூகத்தினர், ஜனவரி 08ஆம் திகதி முதல் அறிவித்தல் வரும் வரை தீவின் சுற்றியுள்ள ஆழக் கடல் மற்றும் ஒதுங்கிய கடல்பரப்புகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றார்கள்.*
DMC, அழைக்கவும் 117.