தனது உத்தியோகபூர்வ முகப் புத்தகத்தில் காணொளியொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரி வித்தார். இந்த உண்மையினை நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் போர் காலத்தில் சிவில் மக்களுக்கு சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி கட்டப்பட்ட இடமே இந்த திஸ்ஸ விகாரை எனப்படும் போலி திஸ்ஸ விகாரையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து நாம் அனைவரும் பொறுப் புடன் செயற்பட வேண்டும். எனவே இந்த விடயத்தில் யாரும் கலவர மடைய வேண்டாம். இங்கே தமிழ் மக்கள் இதுவரை அமைதியாகவே நான் பார்த்திருக்கிறேன். எனவே அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் அவமதிப்பாகவே நான் பார்க் கிறேன் எனவும் தெரிவித்தார்.
நயினாதீவு நாகதீப விகாராதிபதி அவர்கள் 60 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நயினாதீவிலேயே வாழ்ந்து வருகின்றார். தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர் மட்டுமல்ல தமிழ்ப் பழமொழிகளை சிறப்பாக அறிந்து வைத்து அதற்கேற்ப நகைச்சுவையாகப் பேசுவார். அனைத்து இந்து ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்வதை தனது முறைமையாகச் செய்து வருபவர். நயினாதீவு மக்களின் வாழ்வியலோடு இரண்டகக் கலந்த வாழ்க்கை அவருடைய வாழ்க்கையாகும்.
இலங்கையில் உள்ள பௌத்த மதகுருமார்கள் இவரைப் போன்று உண்மை நேர்மை சகிப்புத் தன்மையுடன் இருந்தால் இலங்கைத்தீவு சமத்துவம் மிக்க நாடாக விளங்கும் என்பது உண்மையே.