மனமே உனக்கேன் இந்தவாட்டம் -கண் எதிரே தெரியுது கந்த கோட்டம்

துள்ளிவருகுது வேல் "மனமே உனக்கேன் இந்தவாட்டம் -கண் எதிரே தெரியுது கந்த கோட்டம்" நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ காட்டுக்கந்தன் ஆலய புனருத்தாரண திருப்பணி வேலைகள் மிகவும் சிறந்தமுறையிலும் துரிதகெதியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .என்பதனை முருகன் அடியவர்க்கு .மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் . ஆலய வளாகத்தில் அராலியூர் சிற்பக்கலைஞர்களினால் கருவறையும் அர்த்தமண்டபமும் பூரணமாக கருங்கல்லினால் அமைக்கப்பட்டு வருகின்றது .கருவறையில் மூலமூர்த்தி ஸ்தாபன பீடம் செம்புக்கம்பியினால் நீர்மட்டத்துடன் இணைக்கப்படுகின்றது . இது கந்தவேலின் அருள் திறனை மேலும் அதிகரிக்கின்றது . தொடர் மண்டபங்களான மகா மண்டபம் அர்த்தமண்டபம் அழகிய காவடி அமைப்பில் கொங்கிறீற் வில் மண்டபங்களாக நிர்மாணிக்கப்பட அடித்தள வேலைகள் நடைபெறுகின்றன . ஆறுமுக சுவாமி முத்துக்குமாரசாமிக்கு தனித்தனி ஆலயமும் சண்டேஸ்வரர் .சூரிய சந்திரர் வைரவர் வள்ளியம்மன் சந்நிதி என்பனவும் அமையவுள்ளன . அடியார்களின் குடிநீர் ,அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் கட்டுமான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன . சமகாலத்தில் சுற்று பரிகாரங்கள் [வீதிகள் ] ஒழுங்கு படுத்தல் நந்தவனம் என்பனவும் வசந்தமண்டபம் என்பனவும் அமைக்கப்பட்டுகின்றன . புதிய கண்டாமணி தமிழ் நாட்டில் தூய வெண்கலத்தினால் வார்க்கப்பட்டு அழகிய மணிக்கோபுரத்தில் நிறுவப்படவுள்ளது . ஆலய முக்கிய கட்டுமானப் பணிகள் அனைத்தும் சித்திரைப் புதுவருடதினத்திற்கு முன் நிறைவு பெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர் . ஆனி மாதத்தில் எம்பெருமானின் கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் பாலித்துள்ளது .பிரதிஸ்ட திலகம் நயினை கைலாச வாமதேவக்குருக்களின் மேற்கோள் காட்டி பரிபாலன சபையினர் உறுதிபட தெரிவிக்கின்றனர் . மேற்படி திருப்பணி வேலைகள் நிறைவுற்று முருகனின் திருவருள் பெற்றுய்ய அனைவரும் தம்மால் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு ஆலய பரிபாலன சபையினர் மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றனர் தாங்கள் நேரில் வரும் எமது பிரதிநிதிகளிடம் அல்லது இலங்கை வங்கி நயினாதீவு கணக்கிலக்கத்திற்கு நேரடியாக அனுப்பி உதவலாம் .. நன்றி..... ஆலய பரிபாலன சபையினர் .
Source: Social Media

Recent news