கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்

"வேலை வணங்குவது வேலை -வேலன்கை வேலை வணங்காமல் வேறென்ன வேலை" அன்பர்களே கந்தப்பெருமான் .நமது சொந்தப்பெருமான் ... நயினாதீவு அருள்மிகு காட்டுக்கந்தன் ஆலய திருப்பணி வேலைகள் புலம் வாழும் நயினை உறவுகளாலும் எம் தேசத்து உறவுகளின் நிதி உதவியினாலும் .முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது கருவறை அர்த்தமண்டபம் ,மகாமண்டபம் ,நிருத்தமண்டபம் முத்துக்குமாரசுவாமிகள் கோவில் ஆறுமுகசாமி கோவில் என்பவற்றின் வேலைகள் அராலியூர் கட்டிடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு வருக்கின்றது. எனவே எம் அன்பு உறவுகளே உங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வாரி வழங்கி ஆலய கட்டிட வளச்சிக்கு கைகொடுங்கள் ... ஆலய கணக்கிலக்கம் .75766501.. இலங்கை வங்கி நயினாதீவு எனும் வங்கி கணக்கிற்கோ அல்லது எமது பிரதிநிதிகளிடமோ வழங்கி உதவுங்கள் ... கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் .
Source: Social Media

Recent news