நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் தரம் 01 கால்பதிக்கும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.
இம் மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்கள் அனைத்தையும் வழங்கி உதவினார் நயினை மண்ணின் மைந்தன் தற்போது கனடா நாட்டில் வசிக்கும் தணிகாசலம் சுதர்சன் அவர்கள். தனது நிதி உதவியுடன் தாயார அமரர் வரதலெட்சுமி தணிகாசலம் அவர்களின் நினைவாக வழங்கியும், வருடாவருடம் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன் நிகழ்வில் ஓய்வு பெற்ற கல்விமான்கள், மற்றும் மதத்தலைவர்கள், நயினாதீவு பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
திருமதி உசாலினி சுதர்சன் மற்றும் சுதர்சனின் தந்தையார் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றால் உபகரணப் பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.
மாணவர்களின் வளர்சிக்காய் தங்களின் அர்பணிப்பான சேவைக்கும் .இக் குடும்பத்தாருக்கும் பாடசாலை சமூகம் பெற்றோர்கள் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
வாழ்க, வளர்க உங்கள் நற்ப்பணி.
Source:
Social Media