நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் ஆலயத்தில் தும்பிக்கையான் தம்பி முருகப்பெருமானுக்கு புதிய சித்திரத் தேர் அமைப்பதற்கு நயினை வாழ் கனடா உறவுகள் தங்கள் பங்களிப்பினை வழங்கியும் வழங்கவும் முன்வந்துள்ளனர்.
அதன் கால் கோல் அங்குரார்ப்பன நிகழ்வு நேற்றைய தினம் இணுவிலில் இடம்பெற்றது நிகழ்வின் பதிவுகள்.
வருகின்ற வருடம் 2016 சித்திரை வருடப்பிறப்பில் என் பெருமான் ஆலயத்தில் இரு தேர்களும் வலம் வரும் காட்சியை அடியார்கள் கண் குளிரக் கண்டுகளிப்பீர்கள்.
எம் ஊரின் ஆலய வளர்ச்சிக்கு பெரிதும் .உதவி நல்கி வரும் கனடா வாழ் நயினை உறவுகளுக்கு எம் மண்ணின் மக்கள் சார்பிலும் ஆலய அறங்காவலர்கள் சார்பிலும் இதயம் கனிந்த நன்றிகள் தெரிவிப்பதோடு எம் பெருமானின் அநுக்கிரகம் கிடைக்கப்பெற பணிந்து வேண்டுகின்றோம் ..
ஓம் விநாயகாய நம
Source:
Social Media