நயினாதீவின் நாகவிகாரையில் - புதிய விகாரை திறப்புவிழா

நயினாதீவின் நாகவிகாரை விகாராதி பதி அதிவணக்கத்துக்குரிய நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் அவர்களின் தலைமையில் நயினாதீவின் பழைமை வாய்ந்த ரஜமகா விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய விகாரை திறப்புவிழாவுக்கான கலசங்கள் மற்றும் ஆசனங்கள் தாங்கிய ஊர்திகள் நயினாதீவின் வங்களாவடி துறைமுகத்தில் நேற்றைய தினம் வந்திறங்கியது. தொடர்ந்து ஊர்வலமாக நடனங்கள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் வீதிவழியே சென்று பழைய விகாரையில் பூசை நிகழ்வுகள் இடம்பெற்றது. விழாவில் அமைச்சர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த பிக்குமார்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
Source: Social Media

Recent news