நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம் கல்வி நிலைய கட்டட அடிகல் நாட்டு விழா

நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம் அனுசரணையுடன் நயினாதீவு பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் மாணவர்களின் இட வசதி பற்றாக்குறையை நீக்க கல்வி நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் மற்றும் 3 வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (31/10/2015) வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது. நிகழ்வில் நயினை மண்ணின் மைந்தரும் .கனடா நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் சின்னையா நல்லையா (முன்னாள் வட்டாரக்கல்வி அதிகாரி) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். பயன்தரும் மரங்கள் நடுவோம் நலம்தரும் நயினை மண்ணில் எம்மூரின் பல பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அத்துடன் நயினாதீவு வைத்திய சாலைக்கு தேவையான உபகரணங்கள் பற்றி வைத்திய அதிகாரி அவர்களுடன் கலந்தாலோசித்து அப் பொருட்களை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தினையும் மேற்கொள்ளவுள்ளனர். இவ் மாபெரும் செயற் திட்டத்தினை நயினை மண்ணுக்காய் அர்பணிப்புடன் வழங்கும் நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம் (பிரித்தானியா) உறவுகளை எம் மண்ணின் மக்கள் மனதாரப் பாராட்டுகின்றனர். உங்கள் நற்பணிகள் தொடர்ந்தும் எம் மண்ணில் தொடர நல்லாசிகள். தொடர்க உங்கள் பணி வளர்க உங்கள் கழகம்.
Source: Social Media

Recent news