அபிவிருத்திப்பணியில் - நயினாதீவு பிரான்ஸ் அபிவிருத்திக்கழகம்

நயினை மண்ணில் அபிவிருத்திப்பணியில் தனக்கென ஓர் இடம்பிடித்த நயினாதீவு பிரான்ஸ் அபிவிருத்திக்கழகம். நயினாதீவின் பாடசாலைகள் .முன்பள்ளி பாடசாலைகள் என்பவற்றில் நிலவும் தேவைகளை அறிந்து சேவை செய்து வரும் நயினாதீவு பிரான்ஸ் அபிவிருத்திக்கழகம் அண்மையில் நயினாதீவு .நாகபூஷணி வித்தியாலய மாணவர்களுக்கென நூலகம் ஒன்றை அமைத்துக்கொடுத்தனர். மற்றும் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான மல சல கூடத்தினை நவீன மயப்படுத்தி சிறந்த முறையில் வழங்கி இருக்கின்றனர். அத்துடன் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் வித்தியாலய சுற்று மதில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதைவிட நயினாதீவின் முன்பள்ளிகளுக்கும் பல அபிவிருத்திப் பணிகளை செய்து வருகின்றனர் தேவையறிந்து சேவை செய்யும் பிரான்ஸ் அபிவிருத்திக் கழகத்தை நயினாதீவு மக்கள் பாடசாலைகளின் சமூகம் சார்பாக நன்றியுடன் பாராட்டுகின்றோம். தொடர்க உங்கள் பணி. வளர்க உங்கள் கழகம். நன்றி ..
Source: Social Media

Recent news