நயினாதீவு சிவகாமி அறக்கட்டளை நிலையத்தின் தலைவர் திருவாளர் சின்னத்தம்பி மகாதேவா அவர்களின் நெறியூட்டலில் அறக்கட்டளை நிலையத்தின் நிறுவுனர் மகாதேவா சத்தியரூபன் அவர்களின் பிறந்த நாளில் (12/03/2015) அன்று நயினாதீவு மகாவித்தியாலய நுழைவாயில் வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்
நிகழ்வில் தீவக வலய கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் நயினாதீவின் 3 பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர். அன்றையதினம் நயினாதீவின் 2 பாடசாலைகளுக்கும் மாணவர்களின் கல்வி கற்றலுக்கான கணணிகள் (கணேசா -04 கணணியும், மகாவித்தியாலயம் -04 கணணியும்) வழங்கபட்டது.
சிவகாமி அறக்கட்டளை நிலையத்தின் இந்த மகத்தான பணி பாடசாலைகளின் வளர்சிக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பெரிதும் ஊந்து சக்தியாக திகழ்கின்றது.
நயினாதீவு நாகபூசணி வித்தியால நுழைவாயில் வளைவும் இவர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்டு வேலைகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதுபோன்ற பல சேவைகளை எமது நயினை மண்ணுக்கு வழங்கி வரும் சிவகாமி அறக்கட்டளை நிருவாகத்தினருக்கு பாடசாலை சமூகம் சார்பாகவும் பெற்றோர்கள், மாணவர்கள் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளையும் தங்களின் சேவை தொடர வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
நன்றி
Source:
Social Media