யா \நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வின் விளையாட்டுப்போட்டிகளின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்டம் இன்று காலை ஆரம்பமாகியது.
அதிபர் வீ .ஓங்காரலிங்கம்.அவர்களின் தலைமைத்துவத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் உடற்பரிசோதனையின் பின்னர் நிகழ்வு ஆரம்பமானது. நயினாதீவு வைத்தியசாலை பொறுப்பதிகாரி .DR .சர்வானந்தா .அவர்களினால் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள் ஒவ்வொருவராக உடற்பரிசோதனை செய்த பின்னர் ஓட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாணவர்களின் நன்மை கருதி அம்புலன்ஸ் வண்டி .பின் தொடர்து வருகை தந்தது.இன் நிகழ்வு நயினாதீவின் பாடசாலைகள் வரலாற்றில் முதற்தடைவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஓட்ட முடிவில் முதலாம் இடத்தை நாவலர் இல்லத்தைச் சேர்ந்த ப .பிரதாப், இரண்டாம் இடத்தை இளங்கோ இல்லத்தைச் சேர்ந்த .கா .கஜதீபன், மூன்றாம் இடத்தை நாவலர் இல்லத்தைச் சேர்ந்த .கே .டனுஷன். பெற்றுக் கொண்டனர்.
22 மாணவர்கள் நிகழ்வில் பங்கு பற்றி இருந்தனர்.
உதவிய உள்ளங்களுக்கு .பாடசாலை சமூகத்தின் .நன்றிகள் .
Source:
Social Media