கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு அங்கி (ஜக்கட்) வழங்கும் நிகழ்வு

நயினாதீவு தெற்கு வடக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தால் கடற்றொழிலில் ஈடுபடும் 25 தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு அங்கி (ஜக்கட்) வழங்கும் நிகழ்வு 04.01.2015 அன்று நயினாதீவு தெற்கு கடற்றொழிலாளர் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருவாளர் நடராஜா கணேசமூர்த்தி அவர்காளால் கடற்றொழிலில் ஈடுபடும் 25 தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு அங்கி வழங்கப்பட்டது. நிகழ்வில் பணிப்பாளர் அவர்களை சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து நினைவு பரிசில் வழங்குவதையும் பணிப்பாளரால் பாதுகாப்பு அங்கி வழங்கப்படுவதையும் இங்கு காணலாம்
Source: Social Media

Recent news