நயினை மண்ணின் மைந்தனுக்கு கனடாவில் சாதனையாளர் விருது

நயினாதீவின் மைந்தன் சமய சமூக சேவையாளன் திரு .சின்னத்துரை ஜெகநாதன் அவர்களுக்கு (கனடா மார்க்கம் ரொறன்ரோ கிரிக்கெட் லீக்) 2014 ஆண்டிற்கான சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்திருக்கின்றது. MTCL 20 வருடங்களாக அங்கம் வகித்து 1995 ம் ஆண்டில் துடுப்பாட்ட வீரனாக களம் இறங்கி பல சாதனைகளை நிலைநாட்டியிருந்தார். தொடர்ந்து 1999ல் அதன் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றி 2000ம் ஆண்டளவில் அதன் தலைவராகவும் செயல்ப்பட்டு தனது முழுப்பங்களிப்பையும் வழங்கி இருந்தார். இவர்களின் திறமைமிக்க செயல் கண்டு MCTL கடந்த 09/11/2014 அன்று பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த மாபெரும் விருது வழங்கு நிகழ்வில் இவர்களுக்கு 2014 ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி வாழ்த்தி கௌரவித்திருக்கின்றது. இதன் மூலம் எம் மண்ணுக்கு பெருமை சேர்த்த எங்கள் சமூக சேவையாளனை நாமும் பாராட்டி வாழ்த்துகின்றோம். என்னும் பல விருதுகள் பெற்று தொடர்ந்து உங்கள் சமூக பனி வளர வளமாய் வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன் வளர்க உங்கள் நற்பணி.
Source: Social Media

Recent news