ஜனாதிபதி அவர்கள் இன்று தீவகத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார்

வடபகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் இன்று தீவகத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். அதன் நிகழ்வாக நயினாதீவு நாகவிகாரையில் இடம்பெற்ற பூசை வழிபாட்டிலும், தொடர்ந்து விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரின் ஆலோசனைக்கமைய ''நாகதீப புனித பூமியில்'' புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள .32 முழம் கொண்ட அபய முத்திரை பொறிக்கப்பட்ட புத்தபெருமானாரது .திரு உருவச்சிலையின் அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டு, நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாட்டிலும் கலந்து கொண்டார். இவர்களுடன் இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.
Source: Social Media

Recent news