புனித பூமி , புண்ணியஸ் தலம் என்றெல்லாம் போற்றப்படுகின்ற நான்கு பக்கம் கடலால் சூழப்பட்டதே நயினாதீவு. இங்கு இருக்கின்ற அரசினர் வைத்தியசாலைக்கு கடந்த ஒரு மாத காலமாகியும், இதுவரையும் எந்த ஒரு நிரந்தர மருத்துவரையும் நியமிக்கப் படவில்லை.
இங்கு புங்குடுதீவில் இருந்து மாலை நேரம் மட்டும் வந்து போகும் வைத்தியருக்காக நீண்ட நேரமாக, குழந்தைகள் முதல் முதியோர் வரையிலான நோயாளிகள் காத்துக் கிடக்கும் படங்களினையே இங்கே காணுகின்றீர்கள்.
இதன் பொருட்டு இவர்கள் தங்களின் மருத்துவ தேவைக்கென கடுமையான சிரமத்தின் மத்தியில் ,யாழ் போதனா வைத்தியசாலைக்கும், சிலர் தனியார் மருத்துவ மனைகளுக்கும் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெருந்தொகைப் பண விரயத்திற்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கப் படுவதுடன், இரவு மற்றும் ஏனைய நேரங்களில் ஏற்படுகின்ற அவசர வைத்திய சேவை கிடைக்கப் பெறாமையினால் மாபெரும் உயிர் ஆபத்துக்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே இன் நிலைமையினையும், கடல் சூழ் நயினாதீவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் உள்ள தூர இடைவேளியினையும் கருத்தில் கொண்டு இங்கு நிரந்தர மருத்துவர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றனர் நயினை வாழ் மக்கள்…… யாழ் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரே…………..! இது உங்களின் கவனத்துக்கு ...