வரலாற்றுச் சிறப்புகளையும் ஆன்மிக வளர்ச்சியையும் இலக்கிய பின்னணியையும் கொண்ட நயினாதீவை வெகுவிரைவில் ஓர் செழிப்புமிக்க வளமான கிராமமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கபடுமென யாழ் மாவட்ட அராசங்க அதிபர் கே.கணேஸ் நயினாதீவு சமூக,பொருளாதார,கல்வி கலாசார அபிவிருதிச் சங்கத்தினால்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலங்குளம் வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,மேற்படி நயினாதீவு சமூக,கல்வி பொருளாதார,கலாசார அபிவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகள் யாழ் மாவட்டதிலுள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டும் எனவும் இவ்வண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் நயினாதீவின் அபிவிருத்திக்கு முக்கிய பங்களிப்பு அளிக்கபடுமெனவும் தெரிவித்தார்.உள்ளூராட்சி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இராசையாஉரையாற்றுகையில்,நயினாதீவின் முக்கிய குறுக்கு வீதிகள் இவ் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில்திருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சங்கத்தால் தலைவர் ப.க.பரமலிங்கம் உரையாற்றுகையில்,சங்கம் ஆரம்பிக்கபட்டு இரண்டு வருட காலத்தில் அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின் எவ்வித உதவியும் இன்றி எமது கிராமத்தின் அபிவிருத்திக்காகப் பாரிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளதென்றும் தொடர்ந்து கிராமத்தின் வளர்ச்சிக்காகப் பல அபிவிருத்தி பணிகள் முன்னேடுக்கப்படும் எனவும் தெரிவித்ததுடன் மேற்படி ஆலங்குளம் வீதி புனரமைப்பு வேலைகள் அனைத்தும் எதிர்வரும் நாகபூஷணீ அம்மன் கோவில் வருடாந்த உயர் திருவிழாவிற்கு முன்பாக பூர்த்தி செய்ய சங்கம் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார்.