குறிகாட்டுவான் – நயினை படகுப்பாதைசேவை

அமைச்சர் பசில் இன்று ஆரம்பித்து வைப்பு குறிகாட்டுவான்,நயினாதீவு ஆகிய இறங்கு துறைகளுக்கு இடையிலான கடல் வழிப்போக்குவரத்திற்கான பாதை(Ferry) யொன்றின் அங்குரார்ப்பண வைபமொன்று அன்றைய தினம்(14) வியாழக்கிழமை குறிகாட்டுவான் இறங்குதுறையில் ஆரம்பித்துவைக்கப்படுகிறது. இந்த ஆரம்ப அங்குரார்ப்பண விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக் ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு அங்குரார்ப்பண வைபவ த்தினை தொடக்கி வைக்கவுள்ளார். மேற்படி குறிகாட்டுவான் நயினாதீவு கடல் வழிப்பாதை சேவையற்றுவதற்காக இந்த(Ferry) பாதை திருகோணமலையில் இருந்து கடந்த பல மாதங்களுக்கு மேலாக கொண்டுவரப்பட்டது.அவற்றினை மேற்பார்வை செய்யப்படாமல் துருப்பிடித்த நிலையில் குறிகாட்டுவான் தரையில் கிடப்பதனையும் அநேகர் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தினகரன் – 14/07/2011

Recent news