நயினை அபிவிருத்தி ஒன்றியம் யேர்மனி யின் முதலாவது செயற்குழு தேர்வு

பல முயற்சியின் பின்னர் இன்று நடைபெற்ற நயினை அபிவிருத்தி ஒன்றியம் யேர்மனி யின் முதலாவது பொறுப்பாளராக இளவல் ஷண்முகநாதன் ஐங்கரன் அவர்கள் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். செயலாளராக செல்வன் அனுஷாந்த் விஜயனும்,பொருளாளராக திரு.இ.ராஜசூரியரும், இணைப்பொருளாளராக திரு.சுரேஷ் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். இணைப் பொறுப்பாளர்களாக கந்தசாமி குலேந்திரன், வடிவேலு பகீரதன், கந்தசாமி விஜயகுமார், துரைச்சாமி சாம்பசிவம், திரு.எஸ்.ஜெயபாலன், திரு க.ராஜேஷ்வரன், மற்றும் மூத்தோர்கள் அங்கத்துவ ஆலோசகர்களாகவும் போஷகர்களாகவும், கலைப்பொறுப்பாளர்களாக திருமதிகள்.:-கிருபாமணி மகாலிங்கசிவம்; கலாநிதி வானதி தேசிங்கராசா,திரு.த.சிவகுமார், நகுஷாந் விஜயன், அனுசாந் குலேந்திரன், விளையாட்டுத்துறை:செல்வன் ஆரூரன் குலேந்திரன் ஆகியோர் முன்மொழியப்பட்டு தெரிவானார்கள். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகத்தேர்வும் ஆண்டுக்கு ஒருதடவை ஒன்றுகூடலும் இடம்பெறும்.ஊரில் எம்முடன் இணைந்து பணியாற்ற 5 பேர் தெரிவானார்கள்.அவர்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் அறியத்தரப்படும். தகவல் தொடர்பாளராகவும் ஆலோசகராகவும் தமிழருவி நயினை விஜயன் தெரிவாகியுள்ளார். மேலதிக விபரங்கள் தொடரும். நன்றிகள். மண்வாசனை என்றும் நம் வாழ்வாகட்டும்.அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்
Source: Social Media

Recent news