நயினாதீவு பிரதேச வைத்திய சாலைக்கு புதிய ECG உபகரணம்.

நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் நீண்ட வருடங்களாக நிலவிவந்த ECG உபகரண பிரச்சனையை நயினாதீவுக்கு சேவை செய்யவென புதிதாக வந்திருக்கும் வைத்திய கலாநிதி திரு .சர்வானந்தா அவர்களின் வேண்டுதலுக்கிணங்க நயினை மண்ணின் மைந்தன் கலாபூசணம் சுப்பிரமணியம் கனகரெத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு 15 செட்டியார் தெரு ரவி Jewelers உரிமையாளர்கள் தங்கள் தாயாரின் (அமரர் ரெங்கசாமி ருக்மணி அவர்களின் ஞாபகார்த்தமாக) இன்று நயினாதீவுக்கு வருகை தந்து எமது வைத்தியசாலை வைத்தியர்களிடம் வழங்கப்பட்டது. எமது ஊரின் மக்கள் படும் கஷ்டம் அறிந்து சுமார் 300,000 ரூபா பெறுமதியான உபகரணத்தை உடனடியாக வழங்கிய இந்த நல்ல உள்ளங்களுக்கு நயினாதீவு மக்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Recent news